மழை காலம் (கவிதை )
ஈரம் காயாத உள்ளாடை ,
வாகனம் வாரியிறைத்த
குழி சகதி ,
மேற்கூரை ஒழுக
இருக்கையில்
தண்ணீர் துளியுடன்
பேருந்து பயணம் ,
உரசி உரசி எரிய மறுக்கும்
நமத்து போன தீக்குச்சி,.....
இவையெல்லாம் மீறி
உள்ளம் குளிர
உணர்வுகள் சிலிர்க்க
மண்ணில்
விழுந்து தெறிக்கும்
மழைத்துளி ஸ்பரிசத்தில்
ஜனிக்கும் மழைக்கால
மண் வாசனைக்கு
மயங்காதார் யாருமுண்டோ ..?
No comments:
Post a Comment