அரக்கர் (கவிதை )
உம் மண்ணை ஆண்ட
இலங்கேஸ்வரன் கூட
பிறன்மனை கவர்ந்தும்
ஜனகன் மகள்
விரல் தீண்டவில்லை இறுதிவரை...
சிறார்களை சின்னாபின்னமாக்கி
சீதைகளை சிதைத்து
சிதையுடன் புணர்ந்து
அரக்கர் வம்சம்தான் நாங்கள்
என நீவிர் நிருபித்ததால்
நம்புகிறேன் ராமாயணத்தை...
No comments:
Post a Comment