கருவறை (கவிதை )
முதல் விடியலுக்கு முன்
நீண்ட நித்திரை
முதல் அழுகைக்கு
முந்தைய மௌனம்
சுதந்திரத்துக்கு முன்
சுகமான சிறைசாலை
வாழ்கை சூறாவளிக்கு
முன் மயான அமைதி
நிலையில்லா மண்குடம்
இவ்வாழ்வு என
உடைந்திடும் பனிக்குடம்
அனைத்து உறவுகளும் அறுபடவே
என உணர்த்திடும்
தொப்புள் கொடி...
ஜனனம் பூத்திடும்
ஒரு கல்லறை..
###நிலையில்லா மண்குடம் இவ்வாழ்வு என உடைந்திடும் பனிக்குடம்
ReplyDeleteஅனைத்து உறவுகளும் அறுபடவே என உணர்த்திடும் தொப்புள் கொடி###
arumai arumai... thodarga.