Sunday, April 24, 2011

உலக கோப்பை (கவிதை )

தேசம் பல வென்று

வருடம் பல   கழித்து  

வாகை சூடி பல கோடி

உள்ளங்களில் பால் வார்தான்

எங்கள் கிரிக்கெட் சகோதரன்

ஆர தழுவி உச்சி மோந்து

அழகு பார்த்தாய்

பெருமிதத்தில் நாங்களும்

ஆனந்த கண்ணீர் சொரிந்தது உண்மை

ஹாக்கி கால் பந்து  தடகளம் என நாங்களும்

உன் குழந்தைகள்

அண்ணனுக்கு மட்டும்

என்றும் அறுசுவை உணவு

பாலும் பழமும்

ஒட்டிய வயிறுடன்
 
எச்சில் இலைக்கு  நாங்கள் ஏங்க

அங்கே
 
தட புடலாய் IPL விருந்து ..

அவனுக்கு பட்டு மெத்தை,

உறங்கிட தாலாட்டு ..

இங்கே  

கடுங்குளிரிலும் கட்டாந்தரை 

என்றும் எங்களுக்கு முகாரி!!

எங்கள் சமாதி மேல்

அவனுக்கு வெற்றி பந்தல்

தாயே ஏனிந்த ஓர வஞ்சனை?

உன் அன்பு பார்வை எங்கள்

மீதும் கொஞ்சம் விழுந்தால்

உலக அரங்கில்

ஒலிம்பிக்  தங்கம் கொய்து

உன்  பாதங்களுக்கு நாங்களும்

காணிக்கையாக்குவோம் தாயே!!

1 comment:

  1. ....அவனுக்கு பட்டு மெத்தை, உறங்கிட தாலாட்டு
    கடுங்குளிரிலும் எங்களுக்கு காட்டான் தரை என்றும் எங்களுக்கு முகாரி!!
    எங்கள் சமாதி மேல் அவனுக்கு வெற்றி பந்தல்
    தாயே ஏனிந்த ஓர வஞ்சனை?

    நல்ல கவிதை....
    தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete