கற்றது தமிழ்
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
Tuesday, September 10, 2013
கிளி ஜோதிடம் (கவிதை )
சஞ்ஜீவி பர்வதம்
சுமந்து வானில் பறக்கும்
அனுமன் படம் வந்தது..
திரைகடல் ஓடி
திரவியம் தேட விரைவில்
ஆகாயத்தில் பறப்பேனாம்...
சொன்னான் கிளி ஜோதிடன் ..
தலை சாய்த்து ஏக்கமாய் எனை
பார்த்து கூண்டுக்குள் சென்றது கிளி ..
Wednesday, August 28, 2013
ஜாதி (கவிதை )
பன்றியின் உடலில்
செய்த 'வால்வை '
கூட பழுது பட்ட இதயம்
ஏற்று கொள்ளும் போது
பண்பட்ட இரு மனங்கள்
இணையும் வாழ்வை
ஏற்றுகொள்ள உங்கள்
இதயம் ஏன் மறுக்கிறது ...?
காதல் போயின் ...(கவிதை )
இணையாத
தண்டவாளங்களுக்கு
இடையே
சிதறி கிடந்தது
இணைய முடியாமல் போன
ஒரு காதல் ...
அருந்ததி (கவிதை )
கற்பொழுக்கம் கற்க
கண்ணுக்கு
தெரியாத அருந்ததியை
வானில் மணமகன்
காட்ட
அம்மி மிதித்த
மணப்பெண்ணுக்கு
எழுந்தது ஐயம்..
இதோ கண்முன்
தெரியும் தாயும்
தங்கையும் தெரியாமல்
போனதேன் ..?
Saturday, July 13, 2013
கூண்டுக்கிளி (கவிதை)
கொரித்திட தானியம்
ருசித்திட கனிகள்
பருகிட நீர்
எல்லாம் இருந்தன
கூண்டுக்குள் கிளிக்கு
பறந்திட வானம் தவிர ...
Tuesday, July 2, 2013
Subscribe to:
Posts (Atom)