நசுங்கிவிடும்
சோற்று பருக்கையின் மென்மை கொண்ட
சிறு செல் கூட்டம்
மூவாயிரம் ஆண்டுக்கு முன்
சூல் கொண்ட
சிந்தனை பொறி ஒன்றால்
பாலையில் முளைத்தன
பிரமிட் பூக்கள்..
தீவிரவாதியின் முதல்
சிந்தனை பொறியில்
முன்னுரை
எழுதப்பட்டது பேரழிவுக்கு
தவிடான கோபுரங்கள்..
செயலின் ஆதிமூலம்
சிந்தனை ..
ஆக்கமும் அழிவும்
ஜனிக்கும் அந்த முதல்
சிந்தனை பொறி
எங்கோ ஒளிந்திருக்கும்
இந்த வெல்வெட்
மஜ்ஜைக்குள் ..
No comments:
Post a Comment