அல்லிவட்டம், புல்லிவட்டம் , அயல் மகரந்த சேர்கை , நியூட்டனின் மூன்றாவது விதி , ஐன்ஸ்டினின் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி , பிதாகரஸ் தியரம் , தலையை சுற்றும் பென்சீன் வளைய சமன்பாடுகள் எல்லாம் மெனக்கெட்டு படித்து விட்டு கடைசியில் TNPSC எக்ஸாம் எழுதி வயிற்று பிழைப்புக்காக சம்பந்தமே இல்லாத குமாஸ்தா வேலை செய்து கொண்டிருப்போர் எத்தனை பேர்?
மனது நேசித்த விஷயமே தொழிலாய் அமைந்த பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்திருக்கிறது ...?
மேல் நாடுகளில் உள்ளது போல் குழந்தைகளின் ஈடுபாடு, திறமையை இளம் வயதிலேயே கண்டறிந்து தரம் பிரித்து அதற்கேற்ப கல்விமுறையை தேர்ந்தெடுத்து அவர்களின் எதிர்காலத்தை அமைத்து கொள்ளும் வகையில் அவர்கள கல்வி முறை இங்கேயும் இருந்தால்....
வாத திறமை இருப்பவர்கள் வக்கீலாகவும் அறிவியல் ஆர்வம் உள்ளவர்கள் அப்துல் கலாமாகவும் ஆக வாய்ப்பில்லாமல் ...எத்தனை ஆயிரம் பேர் ..
பசுமையான அந்த பள்ளி நாட்கள்..

வாசு......
அழகாக ஓவியம் வரைவான். அவனுடைய உள்ளங்கை மிருதுவாக இருக்கும் . பெண்மைக்கு உரித்தான நளினம் கொஞ்சம் இருந்தாலும் கண்களில் தெரிந்த ஒரு வசீகரத்தில் தன்னையுமறியாமல் உடன் பயின்ற சில பெண்கள் அவனுக்கு காதல் கடிதம் கொடுக்க வைத்தவன் . மெனக்கெட்டு தண்டால், பஸ்கி செய்து கட்டு மஸ்தாக உடம்பை வைத்திருந்த சில பேர் அவனை பார்த்து வயிறு எரிந்ததுண்டு . ஆனால் ஏனோ அவனுக்கு அதிலெல்லாம் ஈடுபாடு இல்லை . ஓவியம் மட்டுமே அவன் உயிர் மூச்சு ..கடைகளின் பெயர் பலகைகள் , பானர்கள் என்று வரைவான் . கை செலவுக்கு அவ்வபோது ஏதோ கிடைக்கும் . ஓவிய கல்லூரியில் சேர்ந்து பெரிய ஓவியனாக வேண்டும் என்று ஆசை .வீட்டில் ஓவிய கல்லூரியில் சேர வேண்டும் என்று சொன்னபோது " நீ பெரிய பிக்காசோ-ன்னு நெனப்பா .? ஒழுங்கா பொழைக்குற வேலைய பாரு . " கடிந்து கொண்டார் தகப்பனார் வேறு வழியில்லாமல் ITI-ல் FITTER கோர்ஸ்ஸில் சேர்ந்தான் . .
நீண்ட நாட்களுக்கு பின் ஒருமுறை அவனை சந்தித்த போது நலம் விசாரித்து கை குல்லுகினேன் . உள்ளங்கை காப்பு காய்த்து சொர சொரப்பாய் ...

அமுதா....
கையெழுத்து முத்து முத்தாய் கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கும் . எப்போதுமே வகுப்பில் முதல் ரேங்க் . கிளாஸ் டெஸ்ட் முடித்து திருத்தி பேப்பர் கட்டுகளை பிரித்து எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் 98 மார்க் வாங்கினாலும் அரை மார்க் குறைந்ததை கண்டுபிடித்து வாத்தியாரிடம் சண்டை போட்டு மல்லுக்கு நிற்பாள்.
படிப்பு ஏறாத இதர சராசரி மாணவர்களுக்கு பிரம்படி கொடுத்து தங்கள் ஆளுமையை நிலைநாட்டி கொள்ளும் ஆசிரியர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவள்.

மதுரை சொக்க நாதர் பாடி நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட பாடல்
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"
இப்படி பாண்டிய மன்னனுக்கு வந்த ஐயம் போல அவளுக்கு அடிக்கடி வரும் ஐயங்களை கண்டு வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு உள்ளூர ஒரு உதறல் உண்டு.
ஒருமுறை சிக்னலில்.....அடையாளமே தெரியாமல் நிறை மாத கர்ப்பிணியாக அமுதா .. ..ஒரு நிமிடம்தான் பேச முடிந்தது . என்பீல்ட் மோட்டார் பைக்கில் வயது வாரியாக பெட்ரோல் டாங்க் மீது குழந்தைகள் , முறுக்கு மீசையோடு கழுத்தில் நரிப்பல் டாலரில் தங்க செயின், கையில் கனமான தங்க ப்ரேஸ்லெட் போட்டு விறைப்பாக இருந்தார் அவள் கணவர் . சொந்த மாமாவாம் . நல்ல வேளை அந்த ஆள் ஒருமாதிரி முறைத்ததை கவனிக்காமல் மேலும் அமுதா பேசுவதற்குள் பச்சை விழுந்தது.
பாஸ் மார்க் 35. அதில் சில பேருக்கு என்னதான வழித்து எடுத்தாலும் 33-க்கு மேல் தேறாது .அப்போதான் ஆசிரியர்கள் கடவுள் மாதிரி . போனால் போகட்டும் என்று மிச்சம் ரெண்டு மார்க்கை பிச்சை மாதிரி போட்டு மாதா பிதாவுக்கு அடுத்து தெய்வத்தை முந்துவர். அந்த மாதிரி பாஸ் செய்த படுபாவி பிரகாஷ் இப்போ பிரபல குழந்தை நல மருத்துவர் !! பி .கு: அப்பா பருப்பு மண்டி முதலாளி . . பணம் பாதாளம் வரை பாயும் ...
மார்கபந்து ..

தாள வாத்தியங்கள் பிரமாதமாக வாசிப்பான் . ஆண்டு விழாவின் போது
ஆசை நூறு வகை பாட்டுக்கு ட்ரம்ஸ் வாசித்து ஸ்டிக்கை விரல்களில் சுழற்றி வித்தைகள் செய்து மாணவர்களில் விசில்களையும் கரகோஷத்தையும் பெற்றவன் .
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மதுரை பாயிண்ட்-டு-பா
யிண்ட் வண்டியில் ஏறிய போது டிரைவர் சீட்டில் ஒரு பரிச்சயமான முகம் .

"நீ மார்கபந்து தானே . நீ டிரைவரா .. என்ன ஆச்சு ..? மியூஸிக் டைரக்ட்ரா ஆகணும்முனு சொல்லிட்டு இருந்தியே ...?
" நீ வேற ....கல்யாண கச்சேரி கெடைக்கறது கூடபெரும்பாடா இருக்கப்பா .. இப்பல்லாம் கீ போர்டுலேயே ஒப்பேதிடுரானுங்க..நிரந்தர வேலை இல்லாம மியூசிக் ட்ரூப் -ன்னு அலையுரவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான் ...? அதான் அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு ஸ்டீயரிங் வீலை புடிச்சிட்டேன் . வயிறு ஒண்ணு இருக்கு இல்ல ...?"
விரல்கள் ஸ்டீயரிங் வீலில் தாளத்தை போட்டு கொண்டிருந்தது .
முதல் சிறுகதையை படித்து விட்டு தமிழாசிரியர் கணேசன் பாராட்டிய மறக்க முடியாத அந்த வார்த்தைகள் ..
" உன் எழுத்துல ஒரு ஆழமும் யதார்த்தமும் இருக்கு . உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு.. இன்னும் நெறைய எழுது . பாமரனுக்கும் புரியற மாதிரி எழுது... உன்னை சுத்தி நடக்கற விஷயங்களை எழுது. எழுத்து உன் காலத்தையும் கடந்து நிக்கும் .மனுஷங்களோட சந்தோசம், துக்கம் உன் சொந்தகளுக்கு நடந்த துயரம், வாழ்கையில் நீ சந்தித்த மனிதர்கள் , ஹாஸ்யம் , உன் தோல்வி , வெற்றி , கோபம் ,சமூக அவலம், அரசியல் இப்படி எதை பத்தியாவது அனுபவித்து எழுது . மனிதர்களின் குணாதிசயங்களை படி ..எத்தனை விதமான மனிதர்கள்..... வித விதமான பழ மரங்கள் மாதிரி ..நல்லவர்கள், தீயவர்கள் , சந்தர்ப்பம் கிடைக்காததால் வெளியில் நல்லவர்கள் வேடத்தில் திரிபவர்கள்.. பிரத்தியாருக்கு தெரியாம எந்த பிரதிபலனும் எதிர் பாக்காம தான தர்மங்கள் செய்யறவங்க ..கோயிலுக்கு நாலு ட்யூப் லைட் வாங்கி கொடுத்துட்டு செவப்பு பெயிண்ட்ல இன்னார் உபயம்ன்னு எழுதி தம்பட்டம் அடிச்சிகிரவங்கன்னு எந்தனை வித விதமான மனிதர்கள் ...
யாருக்கு தெரியும் ? உன் எழுத்து பலருக்கு வடிகாலாகவும் அவங்க சிந்தையில ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் . ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் போனோமுன்னு இல்லாம உனக்கு யாருன்னே தெரியாத பல பேரோட சிந்தையை மகிழ்ச்சி படுத்துவதும் ஒரு வித சேவைதான். புகழுக்காக , பேருக்காக எழுதாமல் உன் ஆத்ம திருப்திக்காக எழுது . திருநெல்வேலியிலே பேரே இல்லாத இனிப்பகம் இருக்கு "இருட்டுக்கடை" ன்னு ..ஆனா அந்த கடை அல்வா உலக பிரசித்தி . அது போல உன் எண்ண பிரவாகத்தை எழுத்தா பதிச்சு வை ..பூவை தேடி வண்டு தானா வர்றா மாதிரி உன் திறமையை
பார்த்து இந்த உலகம் ஒருநாள் உன்னை திரும்பி பார்க்கலாம்..
நிறைய படி .."

லக்ஷ்மி, இந்துமதி , சிவசங்கரி , சாண்டில்யன் , கல்கி, ராஜாஜி, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து நிறைய படித்து கற்று கொண்ட விஷயங்கள் ...
பருவ காலத்தில் புஷ்பா தங்கதுரை , ஹரால்ட் ராபின்ஸ் போன்ற எழுத்தாளர்கள் கற்று கொடுத்தது "வேறு " விஷயம் ...

பின்பு கை வலிக்க எழுதி தபாலில் பத்திரிகைகளுக்கு அனுப்பி ஆவலோடு இந்த வாரம் பிரசுரமாகுமா அடுத்த வாரம் பிரசுரமாகுமா என்று ஒவ்வொரு வாரமும் வார பத்திரிகை வாங்கி ஏங்கி ..தபாலில் எழுதிய எழுதிய கதை பிரசுரமாகாமல் திரும்பி வர மனதொடிந்த நாட்கள் . .கடைசியாக முதல் சிறுகதை பிரசுரமாக வானத்தில் சிறகடித்து பறந்த சந்தோஷம்.. முதல் பிரசவம் கண்ட தாயை போல ..அந்த உற்சாகத்தில் மேலும் சில கதைகள் ..இலட்ச கணக்கில் சம்பாதிக்கும் பத்திரிகைகள் ஊனை உயிரை உருக்கி மூளையை கசக்கி படைக்கும் படைப்பாளிக்கு கொடுப்பதோ ஏதோ நாய்க்கு போடும் பிஸ்கட் போல..எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டு ஜீவிதம் நடத்தி வெற்றி பெற்றவர் வெகு சிலரே ..
எழுத்தாளன் என்றாலே ஒரு ஜோல்னா பையை மாட்டிகொண்டு
சோடா புட்டி கண்ணாடி, தாடியில் ஜிப்பா போட்டுக்கொண்டு எப்போதும் கற்பனை உலகில் சஞ்சாரிக்கும் அப்பிராணியாக சித்தரிப்பது இந்த சினிமா காரர்களின் வேலையாக போய் விட்டது...

சினிமா ...
எழுத்தாளனாய் குப்பை கொட்டுவது நடைமுறைக்கு சாத்திய படாமல் போக சினிமாவில் முயற்சித்தால் என்ன? ..ஒரு நப்பாசை ...

"பேரு என்ன ..?"
"ஜோதி குமார்"
"சினிமாவுக்கெல்லாம் பேரு கொஞ்சம் கேட்சியா இருக்கணும் .. ஜே . கே-ன்னு வச்சிக்கோ ..இந்த கதை நீயே சொந்தமா எழுதினதா ...? "
" ஆமாம் சார் .."
"சரி கதையை காப்பி ரைட் ரெகிஸ்டர் பண்ணி இருக்கியா ..?"
"இல்லை சார் இதுதான் சினிமாவுக்கு நான் எழுதிய முதல் கதை .."

" சரி டைரக்டர் கிட்டே காமிக்கிறேன் . நல்லா நீட்டா டைப் பண்ணி இருக்கே .அவருக்கு புடிச்சிருந்தா தகவல் வரும் ..போயிட்டு வா ..."
தகவல் வரவில்லை . ஆனால் அந்த அசிஸ்டண்ட் டைரக்டர் அந்த கதையை அப்பட்டமாக திருடி தன் பெயரில் டைரக்ட் செய்து வெளிவர அந்த படம் மெகா ஹிட். ஒரு பக்கம் வஞ்சிக்க பட்டதில் வேதனை இருந்தாலும் அது என் கதை என்பதில் உள்ளுக்குள் ஒரு பெருமை .
தியேட்டரில் இது என் கதை என்று உரக்க கத்தி சொல்ல வேண்டும் போலிருந்தது.
யாரும் நம்ப தயாராய் இல்லை. கோபத்தை மறந்து பிரபலமாகி விட்ட அந்த டைரக்டரை பார்த்து அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள கேட்கலாமென்று போனால் கேட்டில் வாட்ச்மேன் விரட்டியடித்தான்.

அப்பா கத்தியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை .
"காலா காலமா சினிமாவில ஊருனவங்களே அட்ரஸ் தெரியாமே போயிருக்காங்க ..ஒழுங்கா எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு
உருபடுற வழியை பாரு ..ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது ..."
***

"ஏய் ...ஜே .கே ......!!"
தோளை பிடித்து உலுக்கியது உலக்கை போன்றதொரு கரம் .
வைகை எக்ஸ்பிரஸ் போல் கட கடவென்று ஓடிக்கொண்டிருந்த எண்ண ஓட்டத்தின் நடுவே என்ன ஒரு தடங்கல் ...?
வார்டு சிஸ்டர் ரீட்டா ... மஞ்சள் பூசிய முகத்தில்
நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் பெரிய குங்கும பொட்டு.
தலையில் பொருத்தமே இல்லாத நர்ஸ் கேப்பில் கிட்டத்தில் பார்க்க திகில் பட க்ளோஸ்- அப் ஷாட் போலிருந்தது .

"ஜே . கே ...உன்னை எங்கெல்லாம் தேடுறது....? இவ்வளோ நேரம் பிரேக் ரூம்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ....? பன்னண்டாம் நம்பர் பேஷண்டு உன்னதுதானே ....?
"ஆமாம் சிஸ்டர்....."
"ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி Bed Pan - ஐ கொடுத்துட்டு நீ இங்க வந்துட்டே ...அந்த பேஷண்டு ஆய் பண்ணிட்டு லபோ திபோன்னு அங்க கத்திகினு கெடக்குது ...போய் வேலைய பாரு ..சீப்ஃ ரவுண்ட்ஸ் வர்ர நேரமாச்சி .."
"ஆர்த்தோ வார்டுல பையனுங்களை எடுத்தா உபயோகமா இருக்கும்னு பாத்தா இவனுங்க என்னடான்னா மோட்டுவளையை பார்த்து எவளையாவது யோசிச்சிகிட்டு இங்க வந்து நம்ப உசுரை எடுக்க வேண்டியது ...." காதில் விழும்படி முணு முணுத்துக்கொண்டே ஆடி அசைந்து வார்டு சிஸ்டர் ரீட்டா போக பின்னால் பார்ப்பதற்கு குட்டி யானை மீது கூடாரம் கவிழ்தது போலிருந்தது.
லேடெக்ஸ் கையுறையை உருவி கைகளில் மாட்டிக்கொண்டு பனிரெண்டாம் பெட்டுக்கு ஓடினேன்.
.

*******
No comments:
Post a Comment