ஆடிட ஊஞ்சல்
கொரித்திட தானியம்
ருசித்திட கனிகள்
பருகிட நீர்
எல்லாம் இருந்தன
கூண்டுக்குள் கிளிக்கு
பறந்திட வானம் தவிர ...
கைதட்டல்களுக்கு
காத்திராமல்
வானில் அழகாய்
ஒரு ஹைக்கூ
எழுதி மறைந்தது
வானவில் ...
மகனுக்கு கல்லூரி
அட்மிஷன் வேண்டி
காணிக்கை
போட்டேன் உண்டியலில்..
பிரார்த்தனை
நிறைவேறியது...
கோயில் தர்மகர்த்தாவுக்கு ..!!
நதிக்கரையில்
தரை தட்டியிருந்தது
கரையேறாத ஒரு காதல்...
காதல் கடிதத்தில்
செய்த
காகித கப்பலில் ...