Tuesday, September 10, 2013

கிளி ஜோதிடம் (கவிதை )


சஞ்ஜீவி பர்வதம்

சுமந்து வானில் பறக்கும்

அனுமன் படம் வந்தது..

திரைகடல் ஓடி 

திரவியம் தேட விரைவில்

ஆகாயத்தில்  பறப்பேனாம்...

சொன்னான் கிளி ஜோதிடன் ..

தலை சாய்த்து ஏக்கமாய் எனை 

பார்த்து கூண்டுக்குள் சென்றது கிளி ..