Friday, March 22, 2013

கோரிகையற்றுக் கிடக்குதண்ணே...(கவிதை )






கல்யாண சந்தையில்

காட்சி பொருளாய்

காத்திருக்கிறாள் என் அக்கா...

கட்டிய சேலையுடன்

வந்தால் போதும் என

இந்த தேவதை கரம் பிடிக்க 

ஒரு ராமன் இன்று வருவானோ ?

இல்லை போதாது வரதட்சிணை  என்று

இவனும் போவானோ பத்தோடு

பதினொன்றாய் ?


(Picture courtery: Oil paint by artist Ilayaraja)

காசேதான் கடவுளடா (கவிதை)

கறுப்புதான் ...(கவிதை)

மகள் (கவிதை)

மொழி (கவிதை)

அப்பா (கவிதை)

கற்கள் (கவிதை)




பிஞ்சு கரங்களில்

நொறுங்குவது கற்கள்

மட்டுமல்ல

மானுடத்தின்

மானம் கூடத்தான் ...

கல்லறை பூக்கள் (கவிதை)


Thursday, March 14, 2013

HOLY SMOKE (கவிதை)


கரும் புகை போட்டு

ஒழியாத இனவெறிகொண்ட

வயல் எலிகள்,

எங்கும் சூழ்ந்து மூச்சு முட்டும்

புற்று கொடுக்கும் சிகரெட்டின்

மத வெறி புகை மண்டலம் ..

கண் எரிச்சலின் ஊடே

தொலைவில் தெரிந்தது

மணம் கமழும்

சுகந்தம் சுமந்த

அகர்பத்தியின்

மென் புகை போல்

புகை போக்கியில்

புனித தலைமை அறிவித்து

எழுந்த வெண்புகை ..

Sunday, March 10, 2013

அவன் , அவள் , அது . (Opposites attract .well..)


வெளிநாட்டிற்கு செல்லும் ஒவ்வொருவரும் cultural shock எனப்படும் ஒருவித கலாச்சார அதிர்ச்சிக்கு ஆளாவது வழக்கமே . அமெரிக்கா வந்த புதிதில் என் நோயாளிகளுடன் அவர்களுடன் அவர்களின் உறவினர்களோ நண்பர்களோ உடன் வரும் போது அவர்களுக்கு இடையே உள்ள உறவுகளை மாற்றி சொல்லி பல சமயங்களில் தர்ம சங்கடத்தில் மாட்டிகொண்டு அசடு வழிந்ததுண்டு. வயதான நோயாளியின் உடன் வந்த இளம் பெண்ணை பார்த்து "Are you his daughter ?" என்று கேட்க, அதற்கு "No I'm his wife " என்று அவர் பதில் சொல்ல, இந்த situation- னு க்கு எப்படி reaction கொடுப்பது என்று தெரியாமல் பேந்த பேந்த பல முறை நான் விழித்தது உண்டு. இதுவே பரவாயில்லை பல முறை பெண் நோயாளியின் உடன் வந்த பெண்ணை பார்த்து " are you her sister ?" என கேட்க , அதற்கு, "No She is my significant other " என்று பதில் வர ..நமக்குள்ளே இருக்கும் மைண்ட் வாய்ஸ் "கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிசாம்ன்னு நேரம் காலம் தெரியாமல் ரவுசு விட, நாமும் ஒரு professional லுக்கை சீரியஸாக maintain செய்து வேலையை முடிக்க வேண்டியதாயிற்று. இப்போதெல்லாம் இந்த வம்பே வேண்டாமென்று "How are you related to this patient ?" என்று கேட்பதுதான் உத்தமம் என்று பல முறை அடிபட்ட பின்பு தெரிந்து கொண்டேன் . உடன் வேலை செய்யும் சகாவிடம் நான் மனைவி குழந்தைகள் பற்றி வினவ, சரியான பதில் கிடைக்காமல் சில நாட்கள் கழித்து மற்றவர்கள் மூலமாக புரிந்தது அந்த மழுப்பலான பதிலுக்கான அர்த்தம். அடுத்த முறை அவரை பார்க்கும் போது "அவனா நீயி...?" என்ற வடிவேலு டயலாக் நினைவுக்கு வந்தது என்னவோ உண்மை .

அன்றைக்கு ஒருநாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு நண்பர் இன்னொரு நண்பருடன் கேட்டார் Sir, நம்ப பசங்க எல்லாம் இங்க வளர்ராங்க. உங்க பையன் இந்த ஊர் பெண்ணை கல்யாணம் செஞ்சா ok வா என்று,அதற்கு அவர், நீங்க வேற சார்..அவன் யாரை வேணா கல்யாணம் பண்ணட்டும். அது ஒரு பொண்ணா இருந்தா போதும் என்றார் . இது ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் இந்த கால கட்டத்திற்கு கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தது.

உறவுகளில் ஆண் , பெண் என்கிற வரைமுறை தவிர்த்து, ஒரு காலத்தில் இலை மறை காய் மறைவான எங்கோ கூத்தாண்டவர் கோயிலில் கும்மியடிக்கும் விஷயங்கள் இன்று இங்கே சாதரணமாக விஷயமாக மாறி வருவதை காண்கையில் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. இன்றைய மனித உறவுகளில் "பால்"(sexuality ) நாளுக்கு நாள் புது பரிணாமங்களை கொண்டு புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு complex ஆகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு National Geo Channel ல் இது குறித்த ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஆணாக பிறந்து பெண்ணாகவும், பெண்ணாக பிறந்து ஆணாகவும் மாறிய பலருடைய நிஜ கதைகளை பற்றிய நிகழ்ச்சி. நடைமுறை வாழ்கையில் அவர்களுக்கு நேர்ந்த சோகங்கள், அவமானங்கள், இன்னல்கள் விரிவாக சித்தரிக்க பட்டிருந்தது. உடல் ரீதியாக ஆணாக பிறந்த ஒருவர், உளவியல் ரீதியாக தான் பெண்ணாகத்தான் பிறந்திருக்க வேண்டும் என்றும் இயற்கையில் நடந்த ஏதோ ஒரு குளறுபடியில் தான் ஒரு ஆணின் உடலுக்குள் சிறை பட்டிருப்பதாக உணருகிறார்.இதே போல பெண்பாலராய் பிறந்த பலரது கதைகள். இதனால் சமுதாயத்தில், சொந்த குடும்பத்தில் இவர்கள் சந்தித்த போராட்டங்கள் , மன உளைச்சல்கள் சித்தரிக்க பட்டிருந்தது. இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இவர்களாக தேர்ந்தெடுக்காத,இவர்களுக்கு கொடுக்கபட்ட வாழ்கை இது.இதனை புரிந்து கொள்ளாமல் இவர்களை கேளிக்கை பொருளாக, இழிவாக பார்க்கும் சமூகம். பலர் இதற்கு தீர்வாக ஹார்மோன் மற்றும் பால் மாற்று (sex change ) அறுவை சிகிச்சை மூலம் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர் . ஜெர்மானிய ஒலிம்பிக் வீரர் Andreas Krieger ஒரு உதாரணம் . சமீபத்தில் Fallon Fox, அறுவை சிகிச்சை மூலம் முழுவதும் பெண்ணாக மாறிய குத்து சண்டை வீரர்.

உயிரினங்கள் புவியில் தோன்றிய போது இனபெருக்கம் (reproduction ) ஒரு இன்றியமையாத கூறக இருந்தது. ஆண், பெண் கூறுகளை தவிர்த்து Dioecy (monoecious ) என்கிற ஆண் பெண் இரண்டு இனபெருக்க உறுப்புகளையும் ஓன்றாக பெற்ற உயிரினங்கள் காணப்பட்டன. ஆனால் அந்த பண்பு இன அபிவிருத்திக்கு மட்டுமே பயன் பட்டது . ஆனால் மனித இனத்தில் அப்படி இல்லை . மரபியல் குளறுபடி, ஹார்மோன் கோளாறு, மேலே குறிப்பிட்ட இயற்கையில் கருவின் உருவாக்கத்தின் போது நேரும் குளறுபடிகள், இவற்றை தவிர மனித இனத்திற்கு உரித்தான எதுவும் சலித்து போக இதற்கு மேலே அடுத்த கட்டத்திற்கு போக விழைந்து ஆர்வ கோளாறினால் விபரீத பரீட்சைகள் செய்து நம் அரசியல் வாதிகள் போல் நாம் இப்போ எந்த "கட்சியில்" இருக்கிறோம் என்று தங்கள் பாலியல் நிலைபாடு (sexual orientation )கூட தெரியாமல் குழம்பி போய் கிடக்கும் ஒரு கூட்டம். இதை விட தலை சுற்றுகிற விஷயம் Hybrid (Gynandro Morphous)என்பது. அதாவது நம்ப அர்த்தநாரீஸ்வரர் மாதிரி திரிசங்கு சொர்க்கம் (நரகம்?) "அது " உண்டு , "இதுவும் " உண்டு ஆனால் "அது " வேண்டும் , "இது" வேண்டாம் . ஏதாவது புரிந்ததா ? புரியாத வரைக்கும் ஷேமம்.

ஒவ்வொரு நபருக்கும் பெயர் எப்படி ஒரு குறியீடோ அது போல பால் (sexuality )-ம் வெறும் ஒரு குறியீடாக கருதப்படும் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் வந்திருக்கின்றன என நினைக்கிறேன். இதற்கு சான்றாக ஆஸ்திரேலிய நாட்டு பாஸ்போர்ட் -ல் ஆண் ,பெண் மட்டுமல்லாது புதிதாக x என்கிற குறியீடு "பால் நடுநிலையாளர்களுக்கு" வழங்கப்பட்டு அவர்களுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஒரு கலாச்சாரத்துக்கு சமுதாயத்தில் taboo -வாக கருதப்படும் விஷயங்கள் இன்னொரு கலாச்சாரத்தில் ஏற்றுகொள்ள கூடியதாக இருக்கிறது ஒரு காலத்தில் ஊனமுற்றவர் இப்போது மாற்று திறனாளிகள் என்று அழைக்கபட்டு சமூக அங்கீகாரம் பெற்றுள்ளது போல் "அவர்களும் " சமூக அந்தஸ்து கோரும் காலம் இது.என்னதான் இருந்தாலும், இவர்களுக்கு இடையே திருமணம் , குழந்தை தத்தெடுத்தல் இவையெல்லாம் தார்மீக ரீதியாக சரியா என்பதெல்லாம் மத வாதிகளுக்கு முன்பு கார சார விவாதத்துக்கு உரிய விஷயங்களே. திருமணமென்பது ஆண் -பெண் இடையிலான மனமொத்த உறவு , இயற்கை விதிக்கு மாறான இதர எல்லா உறவுகளுமே கண்டனத்துக்கு உரியன என்று இவர்களை கடுமையாக நிந்திக்கும் மதவாதிகள் ஒருபுறம் இருக்க, "அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்? ", ஆண்டவன் முன்னிலையில் அனைவரும் சமம் என இவர்களையும் அங்கீகரித்து ஏற்றுகொள்ளும் தேவாலயங்கள் ஒருபுறம் .

எது எப்படியோ இன்றைய இளம் தலைமுறைக்கு நாம் மெனக்கெட்டு எடுத்து சொல்லித்தான் இவையெல்லாம் புரியவேண்டும் என்பதில்லை. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை ஜீரணித்து, எதையும் எளிதில் எடுத்துகொள்ளும் மன பக்குவத்தில் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல். (பரிணாம வளர்ச்சி ? ) நாம்தான் இந்த கலிகால அலைவரிசைக்கு ஏற்ப நம் மூளையை "டியூன்" செய்து நம் கண்ணோட்டத்தை மாற்றி கொள்ள வேண்டியுள்ளது . ஒரு வில்லங்கமான சப்ஜெக்டை இங்கே விளாவாரியாக விவரிப்பதாக நினைத்து யாரேனும் முகம் சுளிப்பீரானால்... என்னை பொறுத்த வரை வாழ்க்கை என்பது ஒரு ஆடுகளம்.. அதில் என்னென்ன விளையாட்டுகள் நடக்கின்றன என்று தெரிந்து கொள்வது மிக அவசியம் . ஏனென்றால் யாருக்கு தெரியும் எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் (இருக்காது? ) என்று ... !!!