Tuesday, May 29, 2012
என்றோ காட்டிய அன்பு (Kavithai)
சேற்றை வாரி இறைத்தாலும்
சந்தனமாய் மாற்றுவேன் , நீ
எறியும் கற்கள் பூக்களாய் மாறும்
என் பாதையில் நீ தூவிடும் முட்களும்
ரோஜா மெத்தையாகும்
உன் தூற்றல்களும் தூரலாகும்
ஏன் தெரியுமா....?
என்றோ நீ காட்டிய அன்பு இன்னும்
ஈரமாய் என் நெஞ்சில் இருப்பதனால்...
சமூக வலைத்தளம்...(சிந்தனை துளி )
ஒரு காலத்தில் பல நாட்கள் கழித்து கிடைக்கும் தபாலில் பரிவர்த்தனைகள் இருந்தது. அதன் பிறகு தொலைபேசி. இப்போது கணினி யுகம்.
சமூக வலை தளங்கள். இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை அடுத்த நொடியில் வேறெங்கோ இருக்கும் மற்றவருடன் உடனே பகிர முடிகிறது. வேகம்..வேகம் எல்லாவற்றிலும் வேகம்.
சமூக வலைத்தளங்களை எதிர்த்தவர்கள் கூட அதன் அத்தியாவசியதினை புரிந்து கொள்ள ஆரம்பிதிருக்கிரார்கள். அது ஆடம்பரம் என்கிற நிலைமையினை தாண்டி அவசியமாகி விட்ட கால கட்டத்தில் நாம் இப்போது இருக்குறோம்.
பழைய தலைமுறையினர் பலரும் கூட இப்போது மெதுவாக இதில் நுழைய ஆரம்பிதிருக்கிரார்கள். மேலும் எதிர் காலத்தில் smart phone களின் பிரவேசத்தால் இப்போது கணினி முன் உட்கார்ந்து நேரம் செலவிட வேண்டிய காட்டாயம் இல்லாமால் உலகமே நம் உள்ளங்கைக்குள் சுருங்கி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆனாலும்.....
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை குணங்கள் என்றும் மாறபோவதில்லை. மனிதர்கள் பலவித குணாதிசயங்களால் பின்னப்பட்டவர்கள். தின நடைமுறை வாழ்கையில் கோபம், தாபம், சந்தோஷம் என பல உணர்சிகளினால் நாம் எப்போதும் உந்தப்பட்டிருக்கிறோம். யோசித்து பார்த்தால் நாம் சந்திக்கும் இப்போதைய மனிதர்கள் முன்பை விட மிக மிக நுண்ணியவர்களாக (sensitive ) இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
இப்படி பல தரப்பட்ட மனிதர்களுடன் interact செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு கம்பியின் மேல் நடப்பது போல் ஒரு தனி கலை. இதை திறம்பட கையாள முடியாவிட்டால் நாம் பல காயங்களை காண நேரிடும். நேரடியாகவோ தொலை பேசியிலோ கருத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது மறுபக்கம் இருப்பவரின் தோரணையை குரலின் தோணி (tone ) வைத்து தெரிந்து கொள்ளாலாம். ஆனால் எழுத்து மூலம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெரும் போது பல சமயங்களில் நாம் சொல்ல வந்ததை பலர் தவறாக புரிந்துகொள்ள வாய்பிருக்கிறது. நாம் நினைப்பதை நினைத்தபடி எழுத்து மூலம் மற்றவர்களுக்கு புரியவைப்பதும் ஒரு கலையே. அதோடு எழுத்து பதிவுகள் நிரந்தரமானவை. பாதிக்க பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்து மன வருத்தம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக அரிது. தேன் கூடு போல பல வருடங்கள் வளர்ந்த நட்பு ஒரு தவறான கல்லினால் ஒரு நொடியில் கலையகூடும்.
எந்த பதிவுகளையும் பதிக்கும் முன் ஒருமுறைக்கு பல முறை திருமண பத்திரிகையை proof பார்த்தல் போல படித்து பார்த்து பதித்தல் நல்லது. மேலும் கோபத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் எந்த முடிவுமே நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த மாதிரி நேரங்களில் எதையும் உடனே பகிராமல் நேரம் எடுத்துக்கொண்டு மனம் சமாதானமாக இருக்கும் போது கருத்து பரிமாற்றம் செய்தல் நலம். ஆரோக்யமான விவாதங்கள் அறிவை வளர்க்கும். விவாதங்கள் எல்லை மீறும் போது மன வருத்தங்களையும் பகைமை உணர்வுகளையும் காழ்புணர்ச்சியையும் வளர்க்கும். மன நிம்மதியும் உறக்கமும் கெடும்.
முடிவாக உங்கள் சிந்தனைக்கு. "நாடாது நட்டலிற் கேடில்லை நட்பின் வீடில்லை நட்பாள் பவர்க்கு." அதாவது, அன்புடன் பழகிய பின் நட்பை விடுதல் என்பது நட்பிற்கு அழகில்லை. அதனால் ஆராயாமல் நட்பு செய்வதை விட வேறு கேடில்லை.

Subscribe to:
Posts (Atom)