திரையில் லிரில் அழகி குளித்து கொண்டிருந்தாள். நல்ல வேலை யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ள வில்லை.
நல்ல இடமாக பார்த்து அமர்ந்தேன்.
பல சோதனைகளுக்கு பிறகு பிரயர்த்தனபட்டு உழைத்து ஒரு படம் வெளி வரும் போது...பிரவசவிக்கும் ஒரு தாயின் ஆனந்தம், பரவசம். இது என் 100 வது படம். பல இன்னல்களுக்கு பிறகு படிப்படியாய் முன்னேறி சாதாரண அமரேசன் இன்று
பல்லாயிரம் ரசிகர்களின் மனதில் சுப்ரீம் ஸ்டார் அமர்நாத் ஆக இடம் பிடித்திருப்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் பூரிப்பாய் இருக்கிறது.
இப்படி ஜனங்களில் ஒருவனாய் கலந்து ஒரு சாராரி ரசிகனாய் மாறி அவர்களுடன் படம் பார்க்கும் போது என் நிறை குறைகளை துல்லியமாய் கணித்து என்னை மேலும் பதபடுத்தி ஒரு பண்பட்ட கலைஞனாக வளர்த்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு படமும் என் முன்னேற்றத்தின் படிக்கட்டு.
விளம்பரங்கள் முடிந்து பெயர் ஓட ஆரம்பித்தது. வழக்கம் போல் ஒபெனிங் சீனில் நான் தோன்றியதும் விசிலும், கை தட்டலும் பறந்தது.
என் ரசிகர்களுடைய உணர்வுகளை நேரடியாக காணும் போது, அவர்களின் நாடி துடிப்பை நேரடியாக என்னால் உணர முடிகிறது. என்னுடைய வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். அதுவும் இந்த படம் என் 100 படம் என்பதனால் எல்லா சண்டை காட்சிகளிலும் "டூப்" போடாமல் என் முழு திறமையும் காட்டியதில் எனக்கு மிக பெருமை.
இதோ க்ளைமாக்ஸ் காட்சி... வில்லனை துரத்தி கொண்டு 15 மாடி கட்டிடத்தின் மேல் இருந்து குதிக்கும் காட்சி..
அந்த frame freez செய்யப்படுகிறது.....!!!?? .பிண்ணணியில் ஒரு குரல்..
"இந்த காட்சியில் தன் உயிரையும் பொருட்படுத்தாது நடித்து கலைக்காக தன் உயிரை அர்ப்பணித்து கொண்ட supreme ஸ்டார் அமர்நாத் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி..."
வில்லனை துரத்திக்கொண்டு என் டூப் திரையில் ஓடி கொண்டிருந்தான்....கைதட்டலும் விசிலும் பறந்தது.
( கல்லூரி நாட்களில் குமுதத்தில் பிரசுரமான என் சிறுகதை )