
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்துக்கள். எல்லோரும் party hangover முடிஞ்சி, தெளிஞ்சி மீண்டும் அதே பழைய நடைமுறை வாழ்க்கைக்கு வந்திருப்பீங்கன்னு நம்புறேன். உங்களுக்கெல்லாம் leonardo da Vinci பத்தி தெரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கிறேன். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக பெரிய இத்தாலிய ஓவியர் . இவர் ஒரு ஓவியர் மட்டுமல்ல மிக பெரிய சிந்தனையாளர், பெரிய architecht -ம் கூட. இவருடைய உலக புகழ் பெற்ற படைப்புகள் மோன லிசா , last supper .இன்னும் பல . அது மட்டுமல்ல மனித உடற்கூறிலும் இவர் வல்லுநர். இவரை அப்போதைய கத்தோலிக்கர்கள் எதிர்த்தனர். ஏனென்றால் இவருடைய ஓவியங்களில் கதோலிகர்களின் நம்பிக்கைக்கு முரணான செய்திகள் மர்மமாக ஒளித்து வைக்க பட்டிருக்கும். அது மட்டுமல்ல இவருடைய படைப்புகளில் சாமானியனுக்கு புரிபடாத ஏதாவது ஒரு செய்தி ஒளிந்திருக்கும். இவருடைய மோன லிசா ஓவியத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் இன்று வரை பல வல்லுனர்களை சிண்டை பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறது.
பெரிய சிந்தனையாளர்கள் காலத்துக்கு அப்பார் பட்டவர்கள் .இப்படி சித்து விளையாட்டு விளையாடுவது அவர்களுக்கு கை வந்த கலை. வருங்கால தலை முறைக்கு ஏதாவது ஒரு செய்தியை ஒளித்து வைத்து அந்த புதிரை சவாலாக வரும் தலை முறைக்கு வைப்பது அவர்களுக்கு வேடிக்கை. இந்த விளையாட்டை நம் சித்தர்களும் கையாண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு "நந்த வனத்தில் ஒரு ஆண்டி , அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி " இந்த சித்தர் பாடலை மேம்போக்காக பார்த்தால் சிரிப்பான நையாண்டி போல் தெரியும். ஆனால் இதில் ஆழமான வாழ்க்கையின் தத்துவம் ஒளிந்திருக்கிறது. நந்தவனத்தில் - இந்த மானிட பிறவியில், ஆண்டி - நாம், நாலாறு மாதம்- நான்கும் ஆறும் பத்து மாதங்கள் , குயவனை வேண்டி-கடவுளிடம் வேண்டி , கொண்டு வந்தான் ஒரு தோண்டி- நம் மானிட பிறப்பான உடல், கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி - பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நம் வாழ்கை நாம் ஆடும் ஆட்டங்கள் இவையெல்லாம் ஒரு முடிவுக்கு வருபவையே .இதே போல் சித்தர்கள் காடுகளில் திரிந்து பல நோய்களுக்கு மூலிகை மருந்துகளை கண்டு பிடித்து அவற்றையெல்லாம் சித்தர் பாடல்களில் ஒளித்து வைத்தார்கள்.எதற்காக பெரிய ஞானிகளும் சித்தர்களும் இப்படி ஒரு சித்து விளையாட்டு விளையாட வேண்டும். எதற்காக வெளிப்படையாக எளிதில் புயும் படி சொல்லியிருக்க கூடாது.? எந்த விஷயமும் வெளிப்படையாக இருந்தால் அதில் சுவாரசியமோ , அதன் முக்கிய துவமோ அவ்வளவாக தெரியாது. இல்லை மறை காயாக சொல்லப்படும் விஷயங்களை நாம் தேடி கண்டு பிடிக்கும் போது அதன் சுவாரசியமே தனி. அது மட்டுமல்ல, தங்களின் நீண்ட கால உழைப்பின் பலனை எளிதாக மற்றவர்கள் "நோவாம நோம்பு கும்பிட" பிடிக்காமலும் இருக்கலாம். மூடி வைத்த ஒன்றை திறந்தது பார்த்திட தோன்றும் மனித இயல்பினை பயன் படுத்தி தங்கள் படைப்புகளில் அற்புதமான ரகசியங்களை ஒளித்து வைக்கும் அப்படி பட்ட சித்தர்களின் சித்து விளையாட்டு எனக்கும் ரொம்ப பிடுக்கும்.
"பாட்டு படிச்சா சங்கதி உண்டு..என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு... கண்டு பிடி.."
புதிதாக பதிவுகள் ஏதாவது படைக்க இருக்கும் நண்பர்கள் உங்கள் படைப்புகளிலும் ஏதாவது ஒன்றை மறைத்து வையுங்கள். அதன் சுவாரசியம் ரொம்பவே கூடும்...!!